தமிழ்நாடு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி

DIN

வடசென்னை அனல்மின் நிலையத்தில்  2வது அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையின் இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 

இந்நிலையில் 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலனில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொதிகலன் சரிசெய்யப்பட்டு இன்று 2-வது அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

தற்போது அனல்மின் நிலையத்தில் முழுமையாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT