தமிழ்நாடு

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை: திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம். இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்கள் வழங்குவார்கள் என தமிழ்நாடு அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டில், திருமண மண்டபங்களில் மதுபானங்களைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதியில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடுகள், ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT