தமிழ்நாடு

பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது

DIN

பழனி மலைக்கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக அடுத்த இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் 2 நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ரோப்காா் நிறுத்தப்படுவதாக திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பக்தா்கள் மின் இழுவை ரயில், படிப்பாதையைப் பயன்படுத்தி மலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT