தமிழ்நாடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் அளித்த இன்ப அதிர்ச்சி!

DIN


சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 10 ஆம் தேதி நடைபெற்ற ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. இதற்கான விடைகள் வெளியானது. இதில், 4.5.6 ஆகிய 1 மதிப்பெண் வினாக்கள் மற்றும் 2 மதிப்பெண் கொண்ட 28 ஆவது வினாக்களுக்கு குழப்பங்கள் நிலவியது. இதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இதனை பரிசீலனை செய்த தேர்வுத்துறை இயக்குநர் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையடுத்து ஆங்கில தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 4,5,6 ஆகிய 1 மதிப்பெண் வினாக்களுக்கும், 2 மதிப்பெண் கொண்ட 28 ஆவது வினாக்களுக்கு மாணவர்கள் எப்படி பதிலளித்திருந்தாலும் கருணை மதிப்பெண்ணாக மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மே 17 ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT