முகப்பு
தமிழ்நாடு

ஏப் 28-இல் தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரயில் இயக்கம்: இன்று முதல் முன்பதிவு

தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.28) ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.28) ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தாம்பரத்திலிருந்து வெள்ளிக்கிழமை (ஏப்.28) மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06051) மறுநாள் காலை 7.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயிலில் 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இருக்கும்.

இதற்கான முன்பதிவு பயணச்சீட்டை புதன்கிழமை (ஏப்.26) காலை 8 மணி முதல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →