பிரகாஷ் சிங் பாதல் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும், சிரோமணி அகாலி தள முன்னாள் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும், சிரோமணி அகாலி தள முன்னாள் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரகாஷ் சிங் பாதல்(95) சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு காலமானார்.
இவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
மூத்த தலைவரும் ஐந்து முறை பஞ்சாப் முதல்வராகவும் இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்திய அரசியல் மற்றும் பஞ்சாபின் நலனுக்காக அவர் ஆற்றிய செழுமையான பங்களிப்புகள் எப்போதும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
பிரகாஷ் சிங் பாதலின் உடல் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று பிற்பகல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை பகல் 1 மணியளவில் தகனம் செய்யப்படவுள்ளது.