தமிழ்நாடு

இன்று தில்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தில்லி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தில்லி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. 

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் குடியரசுத் தலைவர் கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய திட்டங்களாகப் பார்க்கப்படும் இவற்றுக்கு, குடியரசுத் தலைவரை அழைத்து திறப்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அழைப்புவிடுக்க வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் தில்லி செல்கிறார்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்டோரை முதல்வர் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT