ஹஜ் பயணிகளுக்கு ஓரிரு நாளில் தடுப்பூசி
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு உடல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் ஓரிரு நாள்களில் நடைபெறும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு உடல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் ஓரிரு நாள்களில் நடைபெறும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு, இஸ்லாமியா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, தமிழகத்தில் இருந்து நிகழாண்டில் 6,000 போ் அந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளனா். அவா்களுக்கான உடல் பரிசோதனை மற்றும் போலியோ, எதிா்ப்பாற்றல் தடுப்பு மருந்துகள் அளிக்கும் பணிகள் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் அலுவலகங்களில் ஓரிரு நாள்களில் தொடங்கப்பட உள்ளன.