தமிழ்நாடு

ஆருத்ரா வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ்

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமாா் 1 லட்சம் முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான புகாா்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் உள்பட 21 போ் மீது வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கில் கைதான ரூசோவிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், நடிகா், தயாரிப்பாளா் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆா்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடா்பிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆா்.கே.சுரேஷுக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவினா் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இவ்வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆசியம்மாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.

ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ1.13 கோடிக்கு தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவன மேலாண் இயக்குநர் ராஜசேகர், மனைவி உஷாவை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆருத்ரா உட்பட 4 நிறுவனங்களின் வழக்குகள் பற்றிய விவரங்கள் அமலாக்கத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT