கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

DIN

2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.  ஜேஇஇ முதன்மை தேர்வை எழுதியவர்களில் 43 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஜேஇஇ தோ்வானது ஜேஇஇ-முதல்நிலை (மெயின்), ஜேஇஇ-முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வு என்டிஏ (தேசிய தோ்வு முகமை) சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும்.

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.

jeemain.nta.nic.in என்ற அதிகார்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

SCROLL FOR NEXT