முகப்பு
தமிழ்நாடு

சந்திராயன் 3 செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ துணை இயக்குநர் தகவல்

சந்திராயன் 3 செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ துணை இயக்குநர் எஸ்.வி. சர்மா தெரிவித்தார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:


ஓசூர்: சந்திராயன் 3 செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ துணை இயக்குநர் எஸ்.வி. சர்மா தெரிவித்தார். 

ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள  அட்வைத் தனியாளர் பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. 

இதில், சிறப்பு விருந்தினராக இஸ்ரோ துணை இயக்குநர் எஸ்.வி. சர்மா பங்கேற்று, 57 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சத்து 97 ஆயிரம் உதவித்தொகைகளை வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்திராயன் 3 திட்டப்பணிகள் மேம்பட்ட நிலையில் உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான தேதி, நேரம் விரைவில் அறிவிக்கப்படும். 

மேலும், இந்தியா சார்பில் முற்றிலும் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 117 சாட்டிலைட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ சார்பில் வெளிநாடுகளுக்கு சொந்தமான 398 சார்டிலைட்டுகள் பிஎஸ்எல்வி ஏவுகணை வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

வணிகரீதியான இந்த சார்டிலைட்டுகள் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 

இஸ்ரோவும் நாசவும் சேர்ந்து என்.ஐ.சார் என்ற சார்டிலைட்டை தயாரித்து வருகிறது. இது விண்ணில் செலுத்தப்படும் தகவல் விரைவில் வெளியாகும்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் சாட்டிலைட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மனிதர்கள் இல்லாத சேட்டிலைட்டிகளை விண்ணில் அனுப்பி சோதனை முயற்சிகள் மேற்கொண்ட பின்னர் மனிதனை வைத்து ககன்யான் சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்படும். இதுகுறித்து தகவல்களை விரைவில் இஸ்ரோ அறிவிக்கும் என சர்மா கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →