முகப்பு
தமிழ்நாடு

மீஞ்சூர் அருகே கொதிக்கும் ரசத்தில் விழுந்த கல்லூரி மாணவர் பலி

மீஞ்சூர் அருகே ரசம் கொதித்த பாத்திரத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியானார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
கோப்புப் படம்
பகிர்:

மீஞ்சூர் அருகே ரசம் கொதித்த பாத்திரத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியானார். 

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் கல்லூரி மாணவர் சதீஷ்(20) கடந்த 23ஆம் தேதி திருமண மண்டபத்தின் சமையலறையில் கொதித்துக்கொண்டிருந்த ரசத்தில் தவறி விழுந்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சதீஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த சதீஷ், பகுதி நேரமாக கேட்டரிங் சர்வீஸில் வேலை பார்த்தபோது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →