தஞ்சாவூர் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர். 
தமிழ்நாடு

கோடநாடு வழக்கில் ஆதாரங்கள்: ஆர். வைத்திலிங்கம்

கோடநாடு வழக்கில் ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆர். வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

DIN

தஞ்சாவூர்: கோடநாடு வழக்கில் ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆர். வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலுயுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அமமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைத்திலிங்கம், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

கோடநாடு வழக்கில்  ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இதை அடிப்படையாக வைத்துதான் இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வமும், டிடிவி தினகரன் எந்த கூட்டணியில் இடம் பெறுகின்றனரோ அந்தக் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும். இல்லாவிட்டால் 40 இடங்களில் தோல்வி அடையும் என்றார் வைத்திலிங்கம்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.ஜி.எம். சுப்பிரமணியன், எம். ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைன் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை மோசடி! இளைஞர்களே இலக்கு!!

ஒடிசாவில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

SCROLL FOR NEXT