செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உள்பட கரூரில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உள்பட கரூரில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.
இந்நிலையில், கரூர் செங்குந்தபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்!
அதேபோல், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் கிரானைட் நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் வீடு மற்றும் அலுவலகம் பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து கரூரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.