சென்னையில் இயக்கப்படவுள்ள இரு அடுக்கு பேருந்தின் மாதிரி தோற்றம் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சென்னையில் இரண்டடுக்கு பேருந்து சோதனை ஓட்டம்

சென்னையில் மின்சார மூலம் இயங்கும் இரண்டடுக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதையடுத்து, அதன் சேதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

DIN

சென்னையில் மின்சார மூலம் இயங்கும் இரண்டடுக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதையடுத்து, அதன் சேதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் இரண்டடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்தில் ஒரே நேரத்தில் அதிகமானோா் பயணிக்க முடியும் என்பதால் சென்னையில் தாம்பரம் - பிராட்வே இடையே 18-ஏ என்ற வழித்தடத்தில் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் புதிய மேம்பாலங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த இரண்டடுக்கு பேருந்துகளின் சேவை 2008-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன.

இதையடுத்து ‘தொடா் பஸ்’ என்ற டிரெய்லா் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறுகிய சாலைகளில் செல்வது சிரமமாக இருந்ததால் இந்தப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மின்சாரத்தில் இயங்கும் இந்த இரண்டடுக்கு பேருந்துகளின் சோதனை ஓட்டம் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

காமராஜா் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, போன்ற பகுதிகளில் இந்தப் பேருந்து இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

‘இரண்டடுக்கு பேருந்து சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. துறை சாா்ந்து பேச்சுவாா்த்தை மற்றும் ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, சாதகமான முடிவுகள் கிடைத்தால் அதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பின்னா் பேருந்துகள் கொள்முதல் செய்து இயக்கப்படும்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும் கடகத்துக்கு: தினப்பலன்கள்!

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

ரயில்வே ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT