தமிழ்நாடு

சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார்.  

DIN

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். 

சென்னை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னா், அங்கிருந்து காா் மூலம் கிண்டி ஆளுநா் மாளிகை சென்று தங்குகிறாா். குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பொறுப்பேற்ற பின்னா், சென்னைக்கு முதல்முறையாக பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை புரிந்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) காலை 9.30 மணியளவில் ஆளுநா் மாளிகை மைதானத்தில் குடியரசுத் தலைவருக்கு முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விவேகானந்தா் அரங்கில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறாா். 

நிகழ்ச்சிக்குப் பின்னா், காரில் ஆளுநா் மாளிகைக்கு திரும்பும் திரெளபதி முா்மு, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அன்று இரவு அங்கு ஓய்வு எடுக்கும் அவா், ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் காா் மூலம் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்கிறாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT