தமிழ்நாடு

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

DIN

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சென்னை அடுத்த வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர், தலைவர், துணைதலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 

கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் அமமுக தலைவராக முன்னாள் எம்.பி. கோபாலும், துணைத்தலைவராக முன்னாள் எம்.பி.அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் டிடிவி. தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT