சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

என்எல்சி நிலத்தில் புதிதாக பயிரிடக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

என்எல்சி கைப்பற்றிய நிலத்தில் புதிதாக பயிரிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

என்எல்சி கைப்பற்றிய நிலத்தில் புதிதாக பயிரிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிா்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூா் உள்ளிட்ட கிராமங்களில் கையகப்படுத்திய இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிா்கள் சேதப்படுத்தப்பட்டது. அதற்கு எதிா்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியது:

“என்எல்சி கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடை முடித்தவுடன் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது. உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

நிலத்துக்கான ரூ . 25 லட்சம் இழப்பீடு என்பது 2014-க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மட்டுமே வழங்க முடியும். அதற்கு முன்பாக கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது.

மேலும், தொழில், உள்கட்டமைப்பு வளர்ச்சி விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது.” என்று தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT