செந்தில் பாலாஜி (கோப்பிலிருந்து..) 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி கைது செல்லும்: உச்சநீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

DIN

தில்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளனர்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் விசாரணையை முடித்தனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு தடையில்லை என்றும், கைது செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 வரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT