தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சம்மன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

DIN

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் ஆகஸ்ட் 29ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்ல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் சுமாா் 8 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தாா்.

இவா் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைக் குவித்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா். அப்போது, 2016, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 2021 மாா்ச் 31ஆம் தேதி வரையில் ரூ. 27.22 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், அவரது மனைவி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, இவா்களுக்கு தொடா்புள்ள 56 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த காலங்களில் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனைக்குப் பிறகு, இவ்வழக்கின் குற்றப் பத்திரிகையை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அட... ஆண்ட்ரியா!

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்றார் வைஷாலி!

பிகாரில் நெருங்கும் தேர்தல்: ரூ.36,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

நேபாளம்: இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

SCROLL FOR NEXT