தமிழ்நாடு

உணவகங்களில் மது விற்றால் நடவடிக்கை!

DIN

உரிய அனுமதி பெறாமல் உணவகங்கள் மற்றும் தாபா உள்ளிட்ட கடைகளில் மதுபானம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்திலுள்ள ஒருசில உணவகங்கள் மற்றும் சாலையோர தாபா போன்ற கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், முறைகேடாக மதுபானம் விற்பது தொடர்பாக தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யும்பொருட்டு தமிழ்நாடு
மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் கீழ் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகிறது. 

அவ்வாறு உரிமம் ஏதும் பெறாமல் உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடத்திலும் மதுபானம்
விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT