காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆர்.பொன்னி 
தமிழ்நாடு

காஞ்சிபுரம் சரக டிஐஜியாக ஆர்.பொன்னி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆக ஆர்.பொன்னி புதன்கிழமை பொறுப்பேற்றார்.  அவரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எஸ்பி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

DIN

காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆக ஆர்.பொன்னி புதன்கிழமை பொறுப்பேற்றார்.  அவரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எஸ்பி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கடந்த 4 ஆம் தேதி தமிழக முதன்மைச் செயலாளர் அமுதா காவல்துறையின் உயர் அதிகாரிகள் 27 பேர் இடம் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவராக பணிபுரிந்து வந்த பகலவன் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு மதுரை டிஐஜியாக பணிபுரிந்து வந்த ஆர்.பொன்னி ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்க வந்த அவரை காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், செங்கல்பட்டு எஸ்பி சாய்பிரிநீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன்பின் காவல்துறையின் மரியாதை ஏற்று தனது அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் காவல் துறையின் பல்வேறு மாவட்டங்களிலும் உயர் பதவி பெற்று சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT