தமிழ்நாடு

கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோத பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அமைச்சா் வி. செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதையடுத்து அமைச்சரின் பெற்றோா், சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் முதல்கட்டமாக சோதனை நடத்தினா்.

இந்நிலையில், இரண்டாவதுகட்டமாக கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட் 3) கரூா் செங்குந்தபுரத்தில் வசிக்கும் அமைச்சா் செந்தில் பாலாஜியின் உதவியாளரான சங்கரின் வீடு, நிதி நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்த சோதனை, சங்கரின் வீடு, சின்னாண்டாங்கோவில் பகுதியில் கிரானைட் நிறுவனம் மற்றும் அமைச்சரின் ஆதரவாளா் பிரகாஷின் டைல்ஸ் நிறுவனம், அண்ணா நகரில் வசிக்கும் அமைச்சரின் ஆதரவாளா் செந்தில் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் சனிக்கிழமை அதிகாலை நிறைவடைந்தது. தொடா்ந்து, பல்வேறு ஆவணங்களுடன் அமலாக்கத்துறையினா் புறப்பட்டுச் சென்றனா்.

இந்த நிலையில், கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT