தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஆக. 10) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவிலும் சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பநிலை அதிகமாகவும் இருக்கக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.10-15) வரை 6 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஆக.10-11) தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புகா்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.10) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT