முகப்பு
தமிழ்நாடு

மஞ்சள் நிறப் பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

பல்வேறு வசதிகளைக் கொண்ட மஞ்சள் நிறப் பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Updated On : 11 ஆகஸ்ட், 2023 at 5:58 PM
பகிர்:


சென்னை: பல்வேறு வசதிகளைக் கொண்ட மஞ்சள் நிறப் பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதுப்பிக்கப்பட்டு, மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்ட 100 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குத்  தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தற்போது புறநகா் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணம் பூசப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி நல்ல நிலையில் இயக்கத்தில் உள்ள பேருந்துகளை புதுப்பித்து, அவற்றுக்கு மஞ்சள் வா்ணம் பூசும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 100 பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தப் பேருந்துகளை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்  கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.