முகப்பு
தமிழ்நாடு

ஜாக்சன் துரை 2: பிரிட்டிஷ் அதிகாரியாக சத்யராஜ்!

ஜாக்சன் துரை 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:

ஜாக்சன் துரை 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 'ஜாக்சன் துரை' திரைப்படம் வெளியானது. இப்படத்தை இயக்கிய தரணிதரண் அதன் 2 ஆம் பாகத்தையும் இயக்குகிறார். சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இருவரும் 'ஜாக்சன் துரை 2' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். 

ஜாக்சன் துரை 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், ஷரத் ரவி மற்றும் மணி எச்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இதையும் படிக்க: வெப்பன் டீசர் வெளியீடு!

இந்தப் படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் காட்சியமைக்கப்பட்டுள்ளதால் சிபிராஜ் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். சத்யராஜ் பிரிட்டிஷ் அதிகாரியாக நடிக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →