தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 43,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. பொதுவாக, கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையில் இன்று(திங்கள்கிழமை) காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 43,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ.5,495-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிக்க | வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார்: சஞ்சய் ரௌத்
அதுபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.76.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.