தமிழ்நாடு

நெல்லையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை: உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்

திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் மர்மநபர்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  

DIN

திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் மர்மநபர்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

திருநெல்வேலி அருகேயுள்ள கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜாமணி (32). இவர் கீழநத்தம் ஊராட்சியின் 2 ஆவது வார்டு உறுப்பினராகப் பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை கீழநத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது மர்மகும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாம். பலத்த காயமடைந்த ராஜாமணியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக கீழநத்தம் பகுதியில் சேர்ந்த மாயாண்டி, இசக்கி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் உடற்கூராய்வுக்கு பின்பு ராஜா மணியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். 

கீழநத்தம் வடக்கூர் பகுதியில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் ராஜாமணி கொலையைக் கண்டித்து பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கூடுதலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT