சாதிய, மதவாத வன்முறைகளைத் தடுப்பதற்கு காவல் துறையில் தனி உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெல்லை நான்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மேலும், நான்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நல்ல வழிகாட்டுதலைத் தரும் என நம்புகிறேன்.
சாதிய, மதவாத வன்முறைகளைத் தடுப்பதற்கு காவல் துறையில் தனி உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.