தமிழ்நாடு

ஆடி அமாவாசை: வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசையையொட்டி, புனித நீராடிய மக்கள், தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்பணம்) செய்து புதன்கிழமை வழிபட்டனர்.

இங்கு ஆண்டு தோறும் தை, ஆடி அமாவாசை நாள்களில் நாட்டின் பல பகுதியிலிருந்தும் வரும் மக்கள்  நீராடல் செய்து, தங்களது முன்னோர்களை வழிபடுவது வழக்கம்.

நிகழாண்டு ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை அதிகாலை தொடங்கி நீராடல் நடைபெற்றது. 

கோடியக்கரை கடல் பகுதி முழுக்குத்துறையில் நீராடிய மக்கள் தங்களது முன்னோர்கள் தர்பணம் கொடுத்தனர்.

பின்னர் அவர்கள், அங்குள்ள சித்தர் பீடம், ராமர் பாதம் ஆகிய இடங்களில் வழிபட்டனர். 

இதேபோல், வேதாரண்யம் சன்னதிக் கடல் பகுதியிலும் மக்கள் நீராடி வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT