மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்  முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

முரசொலி மாறன் பிறந்தநாள்: முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

DIN

மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். 

இந்நிலையில் அவர் ராமநாதபுரம் செல்லும் வழியில், மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

   முரசொலி அலுவலகத்தில் அமைச்சர்கள், நிர்வாகிகள் மரியாதை  

அதுபோல சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முரசொலி மாறனின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT