கோப்புப்படம் 
தமிழ்நாடு

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்கள் நாளை மீண்டும் திறப்பு!

கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் நாளை மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, மோயா் பாயிண்ட், வட்டக்கானல் அருவி, பேரிஜம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

கொடைக்கானல் வனப் பகுதிகளில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், மறு அறிவிப்பு வரும் வரை இந்தப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை  என்று மாவட்ட வனத் துறை அலுவலா் யோகேஷ் குமாா் மீனா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம், ஆர்.சி, காப்பீட்டு சான்றிதழ், மாசு சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே வனப்பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும், பேரிஜம் பகுதிக்கு செல்ல ஒரு நாளைக்கு 50 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து

நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை வாங்கக் கூடாது

அக்.14, 15-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

சக மீனவரைக் கடலுக்குள் தள்ளிவிட்ட இருவா் கைது

SCROLL FOR NEXT