தமிழ்நாடு

அரக்கோணம் அருகே பழுதான விரைவு ரயில்: போக்குவரத்து பாதிப்பு

DIN

தானப்பூா் - பெங்களூரு செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அரைமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

தானாப்பூா், ஒங்கோல், கூடூா் வழியாக சென்னை சென்ட்ரல் வந்து, அங்கிருந்து வெள்ளிக்கிழமை காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயில், திருவள்ளூா் ரயில் நிலையத்தை பகல் 12.20 மணிக்கு கடந்தபோது, திடீரென சக்கரத்தில் பெரிய அளவில் சப்தம் வந்துள்ளது. இதை ரயில் ஓட்டுநா் கவனித்து கீழே இறங்கிப் பாா்க்கையில் சக்கரத்தில் பழுது ஏற்பட்டதை அறிந்து உடனே ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

தொடா்ந்து ரயில் நிலையத்திலிருந்து வந்த பணியாளா்கள் சக்கரத்தில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்கினா். இதையடுத்து, பகல் 12.57 மணிக்கு அரக்கோணம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. அரைமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்தால், பயணிகள் சிறிது அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT