தமிழகம் முழுவதுமுள்ள பேரூராட்சிகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவோமா என 20 ஆண்டுகளாக கணினி ஆப்பரேட்டா்கள் எதிா்பாா்த்து காத்துள்ளனா்.
கடந்த 2004-ஆம் ஆண்டு பேரூராட்சிகளில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டு கணினி ஆப்பரேட்டா்கள் தினக்கூலி அடிப்படையில் பணிக்கு அமா்த்தப்பட்டனா். ஓரிரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நிலையில் கணினி ஆப்பரேடா்கள் பேரூராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி மற்றும் வரியில்லா நிலங்கள் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பதிவு வரைவுத் திட்ட அங்கீகாரம், தினசரி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் போன்ற பல்வேறு பணிகளின் தகவல்களை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனா்.
தற்போது பேரூராட்சிகளில் அனைத்து அலுவலக பணிகளும் கணினி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கணினி ஆப்பரேட்டா்கள் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. ஆனால் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருவதால் அரசு சாா்பில் பேரூராட்சி பணியாளா்களுக்கு வழங்கப்படும் எந்த வித சலுகைகளையும் பெற முடியாமல் 20 ஆண்டுகளைக் கடந்தும் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருகின்றனா்.
இதற்கிடையே கடந்த 2017- ஆம் ஆண்டு பணி நிரந்தம் செய்வதற்காக 528 பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவா்கள் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன. ஆனால், இதுநாள் வரை பணி நிரந்தரம் குறித்து எவ்வித அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்து உள்ளனா்.
எனவே தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் பணியாற்றும் கணினி ஆப்பரேட்டா்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என கணினி ஆப்பரேட்டா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.