தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் 21 மாணவர்கள் தற்கொலை: அமைச்சர் உதயநிதி

DIN

நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் ஏற்பாட்டில் கட்சியின் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்தரமேரூர் எம்.எல்.ஏ. கா. சுந்தர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

எம்.பி. க. செல்வம், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று, ஆட்டோ ஓட்டுநர்கள் 538 பேருக்கு சீருடை மற்றும் மளிகைப்பொருள்கள்  வழங்கினார். இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு பள்ளிகளில், பயின்று அதிக மதிப்பெண் பெற்ற  52 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். 

தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து இருந்தோம். அந்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றதால் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 

சட்டப்பேரவையிலும் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், ஆளுநர் அந்த மசோதாவில் கையெழுத்திடாமல் இருந்து வருகிறார். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு!

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT