முகப்பு
தமிழ்நாடு

9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ஆளுநர் இரங்கல்!

லடாக்கில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 9 ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

லடாக்கில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 9 ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, லடாக்கில் எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில், ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 

மிகுந்த துயரமான இந்நேரத்தில் என் எண்ணங்கள் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை நினைக்கிறது. விபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம், பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லடாக்கின் லே பகுதியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கியாரி பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →