தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் கோயில் திருவிழா ஊர்வலத்தில் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த கார்: ஒருவர் பலி;9 பேர் காயம்!

DIN

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரைதெருவில் ஜெய விநாயகர் கோயில் ஆடித்திருவிழா நடந்து வந்தது. திருவிழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருவிழா ஊர்வலம் காஞ்சிபுரம் பாலாஜி தெரு வழியாக வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அப்பகுதியில் காரை ஓட்டி வந்துள்ளார். கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவாமி ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் திருவிழா ஊர்வலத்தில் உயிரிழந்த புகைப்பட கலைஞர் வெங்கடேசன்

சரண், ஞானசேகர் ,குரு பிரசாத், சுகுமார், அக்பர் பாஷா உட்பட ஒன்பது பேர் பலத்த காயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழா ஊர்வலத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து பலரது மீது மோதிய சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT