தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது!

DIN


மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்ப்பது சமூகத்தில் வேற்றுமை ஏற்படுவதை காண்பிக்கிறது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நைனார்குப்பத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று (ஆக. 21) விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, சமூகத்தில் மூன்றாவது பாலினத்தவர்கள் மீது வெறுப்பு காட்டுவது வேதனை அளிக்கிறது.

சமூகத்தில் நாம் அனைவரும் சமமானவர்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்ப்பது சமூகத்தில் வேற்றுமை ஏற்படுவதை வெளிப்படையாக காண்பிக்கிறது எனக் குறிப்பிட்டார். 

மேலும், மூன்றாம்ம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிகழ்வுகள், சமூகத்தில் சத்தமில்லாமல் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புத்தம் புது காலை! ஸ்ருஷ்டி..

பாக்கியலட்சுமி வில்லி! ரேஷ்மா..

ஊஞ்சலில்.. நிகிதா தத்தா!

அற்புத விளக்கு! அஹானா கிருஷ்ணா..

வாக்காளரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ!

SCROLL FOR NEXT