தமிழ்நாடு

ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை? ஸ்டாலின் வாழ்த்து

சென்னையை சொல் என்பதா, ஊர் என்பதா, உயிர் என்பதா? என்று தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

DIN

சென்னை நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையை சொல் என்பதா, ஊர் என்பதா, உயிர் என்பதா? என்று தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்னை நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை?

சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்!

வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை'! என்று சென்னை நாளை கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

சென்னை நாள் என்பது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படுவது கி.பி. 1939, ஆகஸ்ட் 22ஆம் தேதி. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT