சென்னை நாள் 
தமிழ்நாடு

சென்னை நாள்: ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் சர்ச்சை

சென்னை நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை வெளியிட்டுள்ளனர்.

DIN

சென்னை நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை வெளியிட்டுள்ளனர்.

அதுபோல, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டிவிட்டர் என்ற எக்ஸ் பக்கத்தில் தனது சென்னை நாள் வாழ்த்துகளை வெளியிட்டிருக்கிறார்.

அவரது பதிவில், மெட்ராஸ் தினம் அன்று எனது அன்பான வாழ்த்துகள்! வியக்க வைக்கும் கலாசாரத்தையும் பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மீகம் மற்றும் அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் பாரம்பரியத்தைக்கொண்டாடுவோம், அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் அதை மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை நாளில், மெட்ராஸ் தின வாழ்த்துகள் என்று ஆளுநர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT