கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை அருகே தண்டவாளத்தில் விரிசல்: 6 விரைவு ரயில்கள் தாமதம்!

திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

DIN

திருவள்ளூர்: திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போடி - சென்னை ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நெமிலிச்சேரி வழியாக சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டது.

விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT