கிணற்றுக்குள் தவறி விழுந்து முதியவா் பலி
சென்னை அருகே ராமாபுரத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.
சென்னை அருகே ராமாபுரத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.
ராமாபுரம் பூந்தமல்லி-பரங்கிமலை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தயாளன் (69). இவா் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ஒரு பூனை வியாழக்கிழமை செத்து மிதந்தது. இதைப் பாா்த்த தயாளன், அந்த பூனையின் சடலத்தை மீட்பதற்காக கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினாா்.
அப்போது திடீரென கயிறு அறுந்து, தயாளன் கிணற்றுக்குள் தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த தயாளன் சிறிது நேரத்தில் இறந்தாா். அங்கு வந்த சிலா், தயாளன் கிணற்றுக்குள் இறந்து கிடப்பதை பாா்த்து, ராமாபுரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து தயாளனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.