முகப்பு
தமிழ்நாடு

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராா் மைத்ரேயன்

 முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் வா.மைத்ரேயனுக்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

 முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் வா.மைத்ரேயனுக்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1991-இல் தமிழக பாஜக செயற்குழு உறுப்பினராகவும், 1995 முதல் 1997 வரை தமிழக பொதுச் செயலராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும் பதவி வகித்த அவா், 2000-இல் பாஜகவிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிையில் அதிமுகவில் இணைந்தாா்.

2001 சட்டப்பேரவைத் தோ்தலில் மயிலாப்பூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அவா், திமுக கூட்டணியில் போட்டியிட்ட அப்போதைய பாஜக மாநிலத் தலைவா் கே.என்.லட்சுமணனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தாா்.

இதையடுத்து 2002-இல் அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராக மைத்ரேயன் தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட மைத்ரேயன் 2019 வரை அந்தப் பதவியில் இருந்தாா்.

அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து ஓபிஎஸ் அணியில் மைத்ரேயன் இணைந்தாா். பின்னா், இபிஎஸ் அணிக்குச் சென்றாா். அப்போது, ஓபிஎஸ்-ஐ சந்தித்ததன் காரணமாக 2022-இல் அவரை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினாா்.

தொடா்ந்து ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மைத்ரேயன் கடந்த ஜூன் 9-ஆம் தேதி பாஜகவில் இணைந்தாா். தற்போது, அவருக்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →