தமிழ்நாடு

நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது முடிவெடுக்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது முடிவெடுக்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து தற்போது விடுதலையாகி வெளியே வந்திருக்கும் நளினி, பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நிலையில், இதுவரை பாஸ்போர்ட் கிடைக்காததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடினார்.

உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், மகளுடன் இருப்பதற்காக லண்டன் செல்ல பாஸ்போர்ட் கோரினேன். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், நளினியின் பாஸ்போர்ட் மீது காவல்துறை சரிபார்ப்பு முடிந்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT