தமிழ்நாடு

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் பலியானதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை திருவனந்தபுரத்தில் பேட்டி  எடுத்து திரும்பிய நெல்லை செய்தியாளர் குழு சென்ற வாகனம் நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் பலியானதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை திருவனந்தபுரத்தில் பேட்டி  எடுத்து திரும்பிய நெல்லை செய்தியாளர் குழு சென்ற வாகனம் நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், மற்றும் நாராயணன் ஆகியோர் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மேலும் போற்றத்தக்க பத்திரிக்கையாளர் பணியின் போது விபத்தில் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் இந்த அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டுமென அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT