தமிழ்நாடு

ஆக.31 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

DIN

தமிழகத்தில் ஆக.31 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஆக.25(இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகம், புதுச்சேரியில் ஆக.31 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்கள் இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் சராசரி ஊதியம் ரூ.22 லட்சம்: ஐஐடி சென்னை

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT