திருச்சி விமான நிலையத்தில், ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

ரோந்து பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் நேரில் வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

DIN


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை ஞாயிற்றுக்கிழமை (ஆக 27) நேரில் வழங்கினார்.

திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45) கடந்த 30-7-2023 அன்று அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சனிக்கிழமை அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில், ஞாயிற்றுக்கிழமை (ஆக 27) திருச்சி விமான நிலையத்தில், ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். பிரதீப்குமார், மாநகர காவல் துறை ஆணையர் என். காமினி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT