மதுரை: மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் காயமடைந்த 28 பேர் 2 விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை லக்னௌ அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில் சனிக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பெட்டியில் இருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் 9 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். இவர்களின் உடல்கள் உடல் கூறாய்வு செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் லக்னௌவிற்கு @ விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 28 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான பயண ஏற்பாடுகளை தென்னக ரயில்வே மதுரை கோட்டம் செய்துவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 28 பேரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
மதுரையில் இருந்து தில்லி செல்லும் இன்டிகோ விமானம் மூலம் பகல் 2.30 மணிக்கு மருத்துவ கண்காணிப்பு உதவியுடன் 28 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.