தமிழ்நாடு

கல்லூரிகளில் சாதிய பாகுபாடு: 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

DIN


சென்னை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் சில நாள்களுக்கு முன்னா் பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் சக மாணவா்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பலதரப்பினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, இளைய சமுதாயத்தினரிடையே ஜாதி, இன உணா்வு பரவும் பிரச்னையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா்.

இந்த நிலையில் சிவகங்கையில் அரசு கலை மற்றும் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.  இது தொடர்பான விசாரணையில் மாணவர்களின் புகார் உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்களை, பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வியாசர்பாடி கல்லூரி பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன், கும்பகோணம் கல்லூரி பேராசிரியர் சரவணபெருமாள் ஆகியோர் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

மக்களவை தேர்தல் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் (விடியோ)

ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

இந்தோனேசியாவில் தோண்டத் தோண்ட கிடைக்கும் உடல்கள்..!

SCROLL FOR NEXT