கோப்புப்படம் 
தமிழ்நாடு

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வில் மாற்றமா?

தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN

தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு என்பதால் மாநிலம் முழுவதும் இந்த வகுப்புகளுக்கு பொது வினாத்தாள் முறை இருக்கிறது. 

இந்நிலையில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொது வினாத்தாளை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இதன்படி செப்டம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் தொடங்கவிருக்கும் காலாண்டுத் தேர்வில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள் அறிமுகமாகிறது. சோதனை முயற்சியாக முதலில் 12 மாவட்டங்களில் இது நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

முன்னதாக, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அந்தந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் தயாரிக்கும் வினாத்தாளே பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

பள்ளி நாட்காட்டி தகவலின்படி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப். 14 ஆம் தேதியும், 6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 18 ஆம் தேதியும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செப்.15ம் தேதியும் காலாண்டுத் தேர்வு துவங்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!

ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT